E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1143/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ முஹம்மது நசீர், பா.உ.

    1. 1143/ '18

      கௌரவ முஹம்மது நசீர்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— 

      (அ) (​i) இலங்கை மகாவலி அதிகாரசபையின், "சீ" வலயத்தில் சந்துன்புர பிரிவுக்குரிய 142-1 ஆம் இலக்க, மாவனாகம கிராம அலுவலர் பிரிவில், எல்லை கல்தமுகொட காணியில் பல ஆண்டுகளாக நிரந்தரமாக குடியிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள் தொடர்பாக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) மேற்படி காணிகளில் வாழ்வாதாரத் தொழிலாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள குடியிருப்பாளர்களுக்கு இலங்கை மகாவலி அதிகாரசபையின் மூலம் சட்டரீதியாக காணி உரிமங்களை அளிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் திட்டவட்டமான திகதி யாதென்பதையும்;

      (iii) 279, 228, 229, 282, 283, 280, 300, 290, 341, 323, 334, 133, 143, 275, 366, 302, 390, 281, 292, 318 மற்றும் 289 ஆம் இலக்க காணித் துண்டுகள் உள்ளிட்ட இதர காணித் துண்டுகளில் நீண்ட காலமாக குடியிருந்து பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஆட்களுக்கு துரிதமாக காணி உரிமங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-11

கேட்டவர்

கௌரவ முஹம்மது நசீர், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks