E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0078/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 78/ '18

      கௌரவ தயாசிறி ஜயசேகர,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016 மற்றும் 2017 ஆண்டில் ஏற்பட்ட வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட தென்னை மரங்களின் எண்ணிக்கை பற்றி கணக்கெடுப்பு மேற்கொள்ளபட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனின், இவ்வெண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (iii) வறட்சியால் வெகுவாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் யாவை என்பதையும்;

      (iv) அவ்வறட்சியினால் தெங்கு உற்பத்திக்கு ஏற்பட்ட பாதிப்பினையும் தெளிவுபடுத்துவாரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்குப் பதிலாக புதிய தென்னங்கன்றுகளை நடுவதற்கு இன்றுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனின், பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள தென்னங்கன்றுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iii) மேற்படி கன்றுகள் முழுமையாக இலவசமாக வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iv) ஆமெனின், இதற்காக அரசாங்கம் செலவிட்டுள்ள தொகை எவ்வளவென்பதையும் ;

      (v) இன்றேல், தென்னங்கன்று ஒன்றிற்காக அறவிடப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;

      (vi) இற்றைவரையில் தென்னங்கன்றுகள் பெற்றுக்கொடுக்கப்படாவிடின், அவை பெற்றுக்கொடுக்கப்படும் திகதி யாதென்பதையும்;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-13

கேட்டவர்

கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-13

பதில் அளித்தார்

கௌரவ நவின் திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks