E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0089/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 89/ '18

      கௌரவ தயாசிறி ஜயசேக்கர,— கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (​அ) (i) இலங்கையின் வருடாந்த நுகர்வுக்கு தேவையான பெரிய வெங்காயத்தின் அளவு எத்தனை மெட்ரிக் தொன் என்பதையும்;

      (ii) அவற்றில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற அளவு எவ்வளவென்பதையும்;

      (iii) உள்நாட்டில் பெரிய வெங்காயம் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற பிரதேசங்கள் யாவை என்பதையும்;

      (iv) பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (v) பெரிய வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்படும் காணியின் அளவு எவ்வளவென்பதையும்;

      (vi) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரையான வருடாந்த பெரிய வெங்காய அறுவடை ஒவ்வொரு வருடத்துக்கமைய எவ்வளவென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை வலுவூட்டுவதற்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணங்கள் யாவை என்பதையும்;

      (ii) பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை வலுவூட்டுவதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-21

கேட்டவர்

கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-06-21

பதில் அளித்தார்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks