பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
97/ '18
கௌரவ தயாசிறி ஜயசேகர,— பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கேதுவாக தங்களது அமைச்சினால் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கேதுவான நேர்முகப் பரீட்சைகளின் போது நேர்முகப் பரீட்சை குழாம் நடந்துகொள்ள வேண்டிய விதம் தொடர்பாக வரையறைகள் உள்ளனவா என்பதையும்;
(iii) ஆமெனில், அவ்வாறான வரைமுறைகளை சபைக்கு சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iv) மேலே (ii) இல் குறிப்பிடப்பட்ட வரையறைகள் தயாரிக்கப்பட்டிராவிடின் எதிர்வரும் காலத்தில் அவ்வரையறைகளைத் தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) அண்மைக்காலத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆட்சோ்ப்பிற்கு நேர்முகப் பரீட்சைகள் நடாத்தப்பட்டதா என்பதையும்;
(ii) அந்நேர்முகப் பரீட்சைக்கு முகம்கொடுத்த பெண் விண்ணப்பதாரிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடைய கேள்விகள் மற்றும் விடயப் பரப்பிற்கு புறம்பாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(iii) ஆமெனில் அவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ள இடங்கள் யாவையென்பதையும்;
(iv) சம்பந்தப்பட்ட பெண் விண்ணப்பதாரிகளின் மனித உரிமைகள் மீறப்பட்டமை சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-09-03
கேட்டவர்
கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-09-03
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks