E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0105/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 105/ '18

      கௌரவ தயாசிறி ஜயசேக்கர,— பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) 2018 ஆம் ஆண்டு யூன் 11 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் குருணாகல் மாவட்டத்தை தாக்கிய கடும் காற்று காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவின் அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (ii) இடம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iii) உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iv) அழிக்கப்பட்ட சொத்துக்களின் பெறுமதி எவ்வளவென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) உரிய சொத்துக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி நிதி உரிய முறையில் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) உயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனில், மேற்படி இழப்பீட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;

      (v) எவ்வித இழப்பீடும் வழங்கப்படாத வீடுகள் உள்ளனவா என்பதையும்;

      (vi) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-06

கேட்டவர்

கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-06

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks