பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
106/ '18
கௌரவ தயாசிறி ஜயசேக்கர,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2015 ஆண்டு தொடக்கம் இதுவரை,
(i) உயிரிழந்துள்ள சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) மேற்கொள்ளப்பட்டுள்ள சீறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
ஒவ்வொரு வருடத்தின்படி வெவ்வேறாக அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) சிறுநீரக நோய் அதிகளவில் வியாபித்துள்ள பிரதேசங்கள் யாவை என்பதையும்;
(ii) சிறுநீரக நோய் ஏற்பட கமத்தொழில் இராசாயனப் பாவனை காரணமெனில், மேற்படி நோயை கட்டுப்படுத்துவதற்கு கமத்தொழில் அமைச்சுடன் இணைந்த வேலைத்திட்டம் ஏதும் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அவ் வேலைத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்படுமா என்பதையும்;
(iv) சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்கு தேசிய கொள்கையொன்று வகுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) ஆமெனில், மேற்படி தேசிய கொள்கை சபையில் சமர்ப்பிக்கப்படுமா என்பதையும்;
(vi) சிறுநீரக நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் மருத்துவமனைகளில் போதியளவு கையிருப்பில் உள்ளனவா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-09-19
கேட்டவர்
கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-09-19
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks