E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0156/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 156/ '18

      கௌரவ சமிந்த விஜேசிறி,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ஊவா மாகாண முதலமைச்சரினால் ஊவா மாகாணத்தின் குறை அபிவிருத்திக் கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான கருத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதா;

      (ii) ஆமெனில், அக்கருத்திட்டத்தின் நோக்கங்கள் யாவை;

      (iii) தற்போது இக்கருத்திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கிராமங்களின் பெயர்கள் யாவை;

      (iv) தற்போது மேற்படி ஒவ்வொரு கிராமத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள கருத்திட்டங்கள் யாவை;

      (v) குறித்த கருத்திட்டங்களுக்கான கேள்விப்பத்திரங்களைப் பெற்றுக்கொண்ட ஆட்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் செலுத்தப்பட்ட பணத் தொகைகள் ஆகியவற்றை வெவ்வேறாக சமர்ப்பிப்பாரா;

      (vi) கேள்விப்பத்திரங்கள் வழங்கும்போது கடைப்பிடிக்கப்பட்ட முறையியல் யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-08

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-08

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks