E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0213/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. 213/ '18

      கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 27/88 ஆம் மற்றும் 01/99 ஆம் இலக்க பொது நிருவாக சுற்றறிக்கைகளின் பிரகாரம் அரச சேவையிலும், அரச கூட்டுத்தாபனங்களிலும் வெற்றிடங்களை நிரப்பும்போது அவற்றில் 3% சதவீதம் தகைமைபெற்ற மற்றும் அங்கவீனத் தன்மையானது அவர்களது பணிகளுக்குத் தடைகளை ஏற்படுத்தாத அங்கவீனமுற்றவர்களைக்கொண்டு நிரப்பப்பட வேண்டுமென்பதையும்;

      (ii) இலங்கை நிர்வாக சேவைக்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான 2004 (2005) திறந்த போட்டிப் பரீட்சைக்கு பரீட்சை இலக்கம் 0087548 இன் கீழ் தோற்றி 135 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ள 1¼ ஆம் கட்டை, அம்பாறை வீதி, சியம்பலாண்டுவை என்ற முகவரியில் வதியும் உடல் ரீதியாக அங்கவீனமுற்ற ஒருவராகிய திரு. டபிள்யூ.எல்.ஆர்.என். லியனகே தம்மை இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்துகொள்வதனைப் பரிசீலிக்குமாறு கோரியுள்ள மேன்முறையீடானது, அங்கவீனமுற்றவர்களை இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்ய முடியாதெனக் குறிப்பிட்டு பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் நிராகரிக்கப்பட்டுள்ளதென்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) இலங்கை நிர்வாக சேவைக்கு அங்கவீனமுற்றவர்களை ஆட்சேர்க்கலாகாதென ஏற்பாடுகள் உள்ளனவா என்பதையும்;

      (ii) இன்றேல், திரு. லியனகேக்கு நீதியை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-06

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-02-06

பதில் அளித்தார்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks