E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0227/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விஜித ஹேரத், பா.உ.

    1. 227/ '18

      கௌரவ விஜித ஹேரத்,— பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) வத்தளை பிரதேச செயலாளரினால் வத்தளை பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட கல்உடுபிட்ட அரச கட்டடத்துக்கு செலவிடப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி கட்டடம் என்ன நடவடிக்கைக்காக நிர்மாணிக்கப்பட்டதென்பதையும்;

      (iii) அப் பிரதேச சிறுவர்கள் விளையாட்டு மைதானமாகப் பாவித்த ஏற்புடைய காணியில் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டமை விஞ்ஞானபூர்வ அடிப்படை ஒன்றின் பேரில் மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;

      (iv) மேற்படி கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் இன்றளவில் நிறைவு செய்யப்பட்டுள்ள போதிலும் எவ்வித பயன்பாட்டுக்கும் எடுக்கப்படாமை தொடர்பாக பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (v) இன்றளவில் ஏற்புடைய கட்டடம் ஒரு பக்கத்துக்கு சாயத் தொடங்கியுள்ளது என்பதையும் யன்னல்கள், கதவுகள் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்கள் அகற்றி எடுத்துச் செல்லப்பட்டுள்ளதென்பதையும் அறிவாரா என்பதையும்;

      (vi) மேற்படி கட்டடம் இன்றளவில் கவனிப்பாரின்றி காணப்படும் நிலை தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-06

கேட்டவர்

கௌரவ விஜித ஹேரத், பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-02-06

பதில் அளித்தார்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks