E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0240/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

    1. 240/ '18

      கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மகாவலி கங்கையில் மணல் அகழ்வுக்காக வில்கமுவ பிரதேச செயலகத்தினால் அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி நபர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் யாவையென்பதையும்;

      (iii) மேற்படி அனுமதிப்பத்திரங்கள் வழங்கியமை காரணமாக வில்கமுவ பிரதேசத்தில் மகாவலி நதிக்கு பாரிய சுற்றாடல்சார் பாதிப்பு ஏற்படுகின்றதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iv) ஆமெனில், அப் பாதிப்பை நிறுத்த அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-15

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-06-04

பதில் அளித்தார்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks