E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0242/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

    1. 242/ '18

      கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ‍உமா ஓயா அபிவிருத்திக் கருத்திட்டம் காரணமாக பெருந்தொகையானவர்களின் வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளதென்பதையும்;

      (ii) அவ்வாறு வீடுகள் சேதமடைந்த குழுவைச் சேர்ந்தவர்களில் 220 பேருக்கு தமது வீடுகளை கைவிட்டுச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) அவ்வாறு வீடுகளை கைவிட்டுச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ள வீட்டுச் உரிமையாளர்களின் பெயர்களும் முகவரிகளும் யாவை;

      (ii) வீடுகளை கைவிட்டுச் செல்ல முன்னர் அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் இற்றைவரை ஈடேறவில்லை என்பதை அறிவாரா;

      (iii) பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 220 வீட்டுச் உரிமையாளர்களின் சிக்கலைத் தீர்க்க அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-26

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-17

பதில் அளித்தார்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks