E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0275/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

    1. 275/ '18

      ​​கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இன்றளவில் மொணறாகல மாவட்டத்தில் பதிவாகியுள்ள சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் சிறுநீரக நோயினால் உயிரிழந்த நோயாளர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iii) இன்றளவில் மொணறாகல மாவட்டத்தில் சிறுநீரக நோயாளர்களுக்கான சிகிச்சை நிலையங்களை நடாத்துகின்ற மருத்துவமனைகள் யாவை என்பதையும்;

      (iv) மேற்படி மருத்துவமனைகளில் கிசிகிச்சை நிலையங்களில் கடந்த ஆண்டில் பதிவு செய்துள்ள நோயாளர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (v) அதன் பிரகாரம், மொணறாகல மாவட்டத்தில் அதிக சிறுநீரக நோயாளர்கள் உள்ள கிராம அலுவலர் பிரிவுகள் யாவை என்பதையும்;

      (vi) 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் மேற்படி சிறுநீரக நோயாளர்கள் தொடர்பாகவும் சிறுநீரக நோயை தடுப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-03

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-03

பதில் அளித்தார்

கௌரவ பைஸால் காசிம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks