E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0318/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி சிசிர ஜயகொடி, பா.உ.

    1. 318/ '18

      கௌரவ சிசிர ஜயகொடி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் என்ற அடிப்படையில் கல்விச் சேவையில் பதவி உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) மேற்படி விடயத்தின் அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்குவதற்கு விதப்புரை செய்யப்பட்டுள்ள கல்விச் சேவையில் ஈடுபட்டுள்ளோரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பெயர்கள் என்பன யாவை என்பதையும்;

      (iii) அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களென விதப்புரை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அங்கத்தவர்கள் யாவர் என்பதையும்;

      (iv) அக்குழுவின் அங்கத்தவர்களும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் என்ற அடிப்படையில் பதவி உயர்வுகளுக்காக விதப்புரைகளைப் பெற்றுள்ளனரா என்பதையும்;

      (v) ஆமெனில், அக்குழுவின் அங்கத்தவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக விதப்புரை செய்யப்பட்டுள்ள பதவி உயர்வுகள் யாவையென்பதையும்;

      (vi) அப்பதவி உயர்வுகளின் காரணமாக கல்விச் சேவையானது பாராதூரமான வீழ்ச்சிக்கு உள்ளாகும் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-05

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி சிசிர ஜயகொடி, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks