E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0322/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

    1. 322/ '18

      கௌரவ இஷாக் ரஹுமான்,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) இப்பலோகம பிரதேச செயலாளர் பிரிவின், 492 – அம்முணுவெட்டிய கிராம அலுவலர் பிரிவில், கலாவெவ வயல்வெளிக்கு குறுக்கே அலஹப்பெருமகம வரை அமைந்துள்ள கமத்தொழில் வீதி மிகவும் சீர்குலைந்த நிலையில் காணப்படுகின்றதென்பதையும்;

      (ii) சுமார் 1000 விவாசாயிகள் தமது அன்றாட நடவடிக்கைகளுக்கு இவ் வீதியை பயன்படுத்துவதோடு அறுவடை காலத்தில் இவர்கள் இக் கமத்தொழில் வீதியூடாக அறுவடைகளை ஏற்றிச் செல்கையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள் என்பதையும்;

      (iii) இவ் வீதி சுமார் 30 ஆண்டுகளாக புனரமைக்கப்படவில்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) இவ் வீதி இதுவரை புனரமைக்கப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;

      (ii) இதன் பொருட்டு எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iii) இவ் வீதியை புனரமைப்பதற்கு தேவையான நிதியை வழங்குவாரா என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-07

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-10-02

பதில் அளித்தார்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks