பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
355/ '18
கௌரவ மொஹமட் நசீர்,— கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) "ஓய்வூதியத்துடன் கூடிய சேவைகளில் 10 வருடங்களை விட குறைந்த சேவைக் காலத்தை கொண்டுள்ள, ஆனாலும் அமைய மற்றும் தற்காலிக சேவைக்காலத்துடன் சேர்த்து 10 ஆண்டுகளை விஞ்சிய சேவைக்காலத்தை கொண்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய உரித்தினை அளித்தல்" என்ற தலைப்பிலான 94/550/018 ஆம் இலக்க மற்றும் 1994.05.11 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் அப்போது மூடப்பட்ட நெசவுக் கைத்தொழில் திணைக்களத்துக்குரிய லேவெல்ல இயந்திர நெசவுத் தொழிற்சாலையின் தலாத்துஓய நிலையத்தில் காய்ச்சி ஒட்டுனராக பணியாற்றிய தந்துரே, சியம்பலாகொட, கொபோஅங்க, 1/பீ ஆம் இலக்க முகவரியில் வசிக்கும் திரு எம்.ஜி.ஆர் சமரசிங்கவுக்கு இதுவரை ஓய்வூதிய உரித்து வழங்கப்படவில்லை என்பதை அறிவாரா என்பதையும்;
(ii) 1975.10.20 ஆம் திகதி தொடக்கம் ஏற்புடைய நிறுவனம் மூடப்பட்ட நாள் வரைக்கும் பணியாற்றியுள்ள இவருக்கு, அமைய மற்றும் தற்காலிக சேவைக்காலத்தையும் கவனத்தில் கொண்டு ஓய்வூதியத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-06
கேட்டவர்
கௌரவ முஹம்மது நசீர், பா.உ.
அமைச்சு
கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-03-06
பதில் அளித்தார்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks