பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0379/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

    1. 379/ '18

      கெளரவ எஸ்.எம். மரிக்கார்,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மீதொட்டமுல்லைக்கு மேலதிகமாக, உள்ளூராட்சி மன்றங்களினால் அகற்றப்பட்டு தற்போது உருவாகியுள்ள குப்பை மேடுகள் யாவை என்பதையும்;

      (ii) அவை உரித்தான உள்ளூராட்சி மன்றங்கள் யாவை என்பதையும்;

      (iii) தற்போது மேற்படி குப்பை மேடுகளில் காணப்படுகின்ற குப்பைகளின் அளவு யாது என்பதையும்;

      (iv) இவற்றில் தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுகின்ற குப்பை மேடுகள் உள்ளனவா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இவ்வாறான குப்பை மேடுகளுக்கு மென்மேலும் குப்பைகளை அகற்றி அவை வளர்ச்சியடைவதற்கு நடவடிக்கையெடுக்கப்படுகின்றதா என்பதையும்;

      (ii) இன்றேல், அதற்காக உள்ளூராட்சி அமைச்சின் கீழ் ஏதேனுமொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) இதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியில் முதலீடுகளைப் பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனில், அவை யாவை என்பதையும்;

      (v) தற்போது ஏதேனும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பின், அதன் முன்னேற்றம் யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-05

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks