பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0381/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

    1. 381/ '18

      கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தற்போது 106 ஆண்டுகளைப் பூர்த்திசெய்துள்ள இலங்கை சாரணியர் இயக்கத்தில் 75000 இற்கு மேற்பட்ட சிறுவர்களும் சிறுமியர்களும் சேவை வழங்குகின்றார்கள் என்பதையும்;

      (ii) சாரணியர்களின் "வேலை வாரம்" நிகழ்வின் மூலம் வருடாந்தம் ஈட்டிக்கொள்ளப்பட்டு சாரணியர் தலைமையகத்திற்கு கிடைக்கின்ற ரூபா 8 மில்லியன் பணத்தொகை கடந்த ஐந்து வருடங்களில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் செலவு செய்யப்பட்டுள்ளதென்பதையும்;

      (iii) தலைமை அலுவலகக் கட்டிடத்தை நிருமாணிக்கும் போது சாரணியர் குழு அங்கத்தவர்களின் அனுமதியின்றி முன்னாள் தலைமை சாரணியர் ஆணையாளர் திரு. நிமல் த சில்வா தனது நட்புக்குரியதொரு கம்பனிக்கு மதியுரைக் கட்டணமாக ரூபா 8 மில்லியன் பணத் தொகையையும் உரியமுறையில் நிருமாணிக்கப்படாத கட்டிடத்திற்கு ரூபா 14 மில்லியனையும் செலுத்தியுள்ளாரென்பதையும்;

      (iv) சாரணியர் "வேலை வாரம்" நிகழ்வின் மூலம் ஈட்டிக்கொள்ளப்படுகின்ற பணத்தை பயன்படுத்தி வனப் பேணுகை திணைக்களத்தின் உரிய அனுமதியின்றி நுவரெலியா பிரதேசத்தில் சாரணியர் முகாமொன்றிற்காக நிருமாணிக்கப்பட்ட சீமெந்து கூடங்கள் தடைசெய்யப்பட்டதன் விளைவாக பெருந்தொகையான நிதிசார் நட்டம் எற்பட்டுள்ளதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) தற்போது இந்நிதியினை தவறாகப் பயன்படுத்தியமை சம்பந்தமாக முறையானதொரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்,

      (ii) அதன் முன்னேற்றம் யாதென்பதையும்,

      (iii) இல்லையெனில், எதிர்வரும் காலத்தில் இவ்விடயம் சம்பந்தமாக முழுமையான விசாரணையொன்று நடாத்தப்படுமா என்பதையும்,

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-08

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-17

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks