பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
384/ '18
கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கெரவலபிட்டி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கன எரிபொருள் எண்ணெய் (HFO) மூலம் தற்சமயம் இயங்கும் மின்னுற்பத்தி நிலையத்தை ஓராண்டுக்குள் நீர்ம இயற்கை வாயு (LNG) மூலம் இயங்க வைப்பதற்கு இணக்கப்பாடு காணப்பட்டதா என்பதையும்;
(ii) இவ்விணக்கப்பாடு முறிந்துள்ளதா என்பதையும்;
(iii) மேற்படி இணக்கப்பாடு முறிந்தமையால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி மின்னுற்பத்தி நிலையத்தினால் இலங்கை மின்சார சபைக்கு பெற்றுக் கொடுக்கப்படும் மின்சார அலகொன்றின் விலையை தீர்மானிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டுக்கு முரணாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதை அறிவாரா என்பதையும்;
(v) ஒப்பந்தத்தின் பிரகாரம் மின்சாரத்தை விநியோகிக்கும் நிறுவனம் செயற்படுவதை உறுதிபடுத்துவதற்கு மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(vi) மேற்படி இணக்கப்பாட்டின் பிரகாரம் நடவடிக்கை எடுக்காமையால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டம் எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-07
கேட்டவர்
கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-02-07
பதில் அளித்தார்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks