பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
395/ '18
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) மகாவலி கங்கை கடலில் சங்கமிக்கும் இடத்திலுள்ள மூன்று பாலங்களில் உப்பாறு பாலத்தின் அடியில் கடல் அலைகளால் இயற்கையாக உருவாகியுள்ள மணல் மேட்டினை நீக்குவதற்கு தனியார் வர்த்தகர் ஒருவருக்கு அனுமதிப் பத்திரம் எவருடைய விதப்புரையின் பேரில் யாரால் வழங்கப்பட்டுள்ளதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) உப்பாறு பாலத்தின் தாங்கு தூண்களுக்கு அருகில் படிந்துள்ள கடல் மற்றும் ஆற்று மணல் திடலை நீக்க வேண்டுமென புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) இவ்வாறு மணலை நீக்குவதனால் உப்பாறு பாலத்தின் தாங்கு தூண்களுக்கு அல்லது நீடித்த தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதென உறுதி அளிக்கப்படுமா என்பதையும்;
(iii) இவ்விடத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் மணலை நேரடியாக நிர்மாண வேலைகளுக்கு பயன்படுத்த அங்கீகரிக்க முடியுமா என்பதையும்;
(iv) மேற்படி மணல் திடலை நீக்குவதனால் ஆற்று நீர் குறைந்த காலத்தில் ஆற்று நீரும் கடல் நீரும் கலப்பதால் நிதமும் மகாவலி கங்கை நீரில் கடல்நீர் கலக்கும் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(v) இப்பாலத்தின் அடியில் மணல் அகழ்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-22
கேட்டவர்
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-02-22
பதில் அளித்தார்
கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks