பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0398/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

    1. 398/ '18

      கௌரவ எஸ்.சி. முத்துகுமாரண,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2017 பெரும்போகத்தில் பறங்கிக்காய் மற்றும் தக்காளி போன்ற பயிர்ச்செய்கைகளின் அறுவடையை விற்கமுடியாமை காரணமாக விவசாயிகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதை ஏற்றுக்கொள்வாரா;

      (ii) இதனால் பறங்கிக்காயை கொள்வனவு செய்வதற்காக பொதுத் திறைசேரி 05 மில்லியன் ருபாவை ஒதுக்கியிருப்பதாக பத்திரிகையில் வெளிவந்த செய்தி உண்மையானதா;

      (iii) அவ்வாறெனின், அவற்றை விற்பது மற்றும் கொள்வனவு செய்தலுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எவை;

      என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா;

      (ஆ) (i) அந்த மரக்கறி ஒரு கிலோ கொள்வனவு செய்யப்பட்ட விலை எவ்வளவு ;

      (ii) அவை விற்கப்பட்ட விலை எவ்வளவு:

      (iii) கொள்வனவு செய்யப்பட்ட மரக்கறியின் அளவு எவ்வளவு:

      (iv) இந்த வேலைத்திட்டத்தினால் ஏற்பட்ட இலாபம் அல்லது நட்டம் எவ்வளவு;

      (v) இந்த வேலைத் திட்டம் வெற்றியளிப்பின் இது எதிர்வரும் ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்படுமா;

      என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-21

கேட்டவர்

கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-02-21

பதில் அளித்தார்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks