பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
417/ '19
கௌரவ காமினி லொக்குகே,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1978.12.01 ஆம் திகதியன்று இலங்கைப் போக்குவரத்து சபையில் சேவைக்கு இணைந்த திரு கே. விமலசேன 2016.11.24 ஆம் திகதியன்று சேவையிலிருந்து ஓய்வு பெற்றார் என்பதையும்;
(ii) இவருக்கு உரித்தான பணிக்கொடைத் தொகை மற்றும் மிகை விதிப்புக் கட்டணத்தின் கூட்டுத்தொகை ரூ 2,047,425.25 என்பதையும்;
(iii) அத் தொகை 2016.12.24 ஆம் திகதிக்கு முன்னதாக செலுத்தப்பட்டிருக்க வேண்டுமென்பதையும்;
(iv) திரு. விமலசேன புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இவர் கடும் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதையும்;
(v) இதுவரை திரு. விமலசேனக்குரிய பணிக்கொடை மற்றும் மிகை விதிப்புக் கூட்டுத்தொகை செலுத்தப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) திரு. விமலசேனவுக்கு உரித்தான பணிக் கொடை மற்றும் மிகை விதிப்புக் கூட்டுத்தொகை செலுத்தப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-21
கேட்டவர்
கௌரவ காமினி லொக்குகே, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-02-21
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks