E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0418/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ காமினி லொக்குகே, பா.உ.

    1. 418/ '19

      கௌரவ காமினி லொக்குகே,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை நிலஅளவைத் திணைக்களத்தின் அளவை வெளிக்கள உதவியாளர் பதவிக்கென 2017 ஆண்டு போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டதை அவர் அறிவாரா என்பதையும்;

      (ii) இப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் பயிற்சிக்கென சேர்த்துக்கொள்ளப் பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iii) பயிற்சிக்கென அறவிடப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;

      (iv) மேற்படி பயிற்சி பெற்றவர்களில் அளவை வெளிக்கள உதவியாளர் பதவிக்கு இலங்கை நிலஅளவைத் திணைக்களத்திற்கு சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (v) பயிற்சி பெற்றவர்களில் நியமனம் பெறாதவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (vi) போட்டிப் பரீட்சையில் சித்திப்பெற்று பயிற்சியை முடித்து தற்சமயம் தொழிலுக்கு சேர்த்துக்கொள்ளப்படாதவர்களுக்கு நியமனம் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      (vii) ஆட்சேர்ப்பு படிமுறைக்கு புறம்பாக அளவை வெளிக்கள உதவியாளர் பதவிக்கு சேர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;

      (viii) போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து பயிற்சிக்காகத் தொிவுசெய்யப்படாத விண்ணப்பதாரர்கள் தொடர்பாக திணைக்களம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-22

கேட்டவர்

கௌரவ காமினி லொக்குகே, பா.உ.

அமைச்சு

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-02-22

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks