E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0431/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கனக ஹேரத், பா.உ.

    1. 431/ '19

      கௌரவ கனக ஹேரத்,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் முக்கியமானதொரு பொதுச் சேவையாக அமையும் புகையிரத போக்குவரத்துச் சேவை, புகையிரதங்கள் உரிய நேரத்தில் உரியவாறு பயணிக்காமை மற்றும் அதிகமான பயணிகள் நெரிசலைக் ​கொண்டு காணப்படுதல் ஆகிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், இதற்கான காரணம் யாதென்பதையும்;

      (iii) இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு உரித்தான, பிரயாணத்தில் ஈடுபடுத்தக்கூடிய நிலையில் காணப்படும் புகையிரதங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iv) இதன் மூலம் இலங்கையின் சகல புகையிரத போக்குவரத்து தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளக் கூடியதாக உள்ளதா என்பதையும்;

      (v) 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர், புகையிரத சேவையில் புதிய இயக்கு வலுத் தொகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பின், அவை யாவை என்பதையும்,

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-20

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-06-20

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks