பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
510/ '19
கௌரவ விமலவீர திசாநாயக்க,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது இயங்குகின்ற மற்றும் கலைக்கப்பட்டுள்ள மாகாணசபை உறுப்பினர்களில் சிலருக்கு சலுகை அடிப்படையிலான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) எனினும், தற்போது இயங்குகின்ற மற்றும் கலைக்கப்பட்டுள்ள மாகாணசபைகளின் பதவி வகிக்கின்ற மற்றும் பதவி வகிக்காத உறுப்பினர்களின் சிலருக்கு மேற்படி வரி சலுகையுள்ள வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும்;
(iii) இதுவரை பதவி வகிக்கின்ற அல்லது பதவி வகிக்காத உறுப்பினர்களில் சிலர் தொடர்ந்து ஐந்து வருட காலம் பதவி வகித்திருப்பதோடு அதில் அதிக பட்சமானவர்கள் தற்போது கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளின் உறுப்பினர்கள் ஆவர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இதற்கமைய, மாகாண சபை உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் வரிச் சலுகை அடிப்படையிலான வாகன அனுமதிப்பத்திரம் பெற்றிருக்கையில் அவ்வனைத்து தகைமைகளையும் பூர்த்திச்செய்துள்ள வேறு உறுப்பினர் சிலருக்கு மேற்படி அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமை பாரிய அநீதி என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி வாகன இறக்குமதி அனுமதி பத்திரம் இதுவரை கிடைக்கப்பெறாத மாகாணசபை உறுப்பினர்களுக்கு மேற்படி அனுமதி பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-05-07
கேட்டவர்
கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-08-06
பதில் அளித்தார்
கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks