பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
522/ '19
கௌரவ விதுர விக்ரமநாயக்க,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஹொரண தேர்தல் தொகுதியில் பாற் பண்ணையாளர்களினால் வழங்கப்படும் பசும்பாலுக்காக மில்கோ நிறுவனத்தினால் ஒவ்வொரு மாதமும் 01 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரையிலான நாட்களுக்காக அடுத்துவரும் 06 நாட்களுக்குள்ளும் 16 ஆம் திகதி தொடக்கம் இறுதித் திகதி வரையிலான நாட்களுக்கு அடுத்துவரும் மாதத்தின் முதல் 06 நாட்களுக்குள்ளும் பணம் செலுத்தப்பட்டதையும்;
(ii) எனினும், கடந்த சில மாதங்கள் தொடக்கம் செலுத்தல்கள் தாமதமடைந்ததுடன் 2018.05.01 தொடக்கம் 2018.05.15 ஆம் திகதிவரையிலான நாட்களுக்கு மே மாதம் 31 ஆம் திகதி வரை செலுத்தல்கள் செய்யப்படவில்லை என்பதையும்;
(iii) இந்த நிலைமை காரணமாக பாற்பண்ணையாளர்களுக்கு கறவைப் பசுக்களுக்கு தேவையான உணவுகளை வழங்குதல் கறவைப் பசுக்களை கொள்வனவு செய்வதற்காக வாங்கிய கடன்களின் தவணைப் பணத்தை செலுத்தல் மற்றும் தமது அன்றாட செலவுகளை மேற்கொள்வதற்கு முடியாதுள்ளது என்பதையும்;
(iv) பால் உற்பத்தி குறைந்துள்ளதனால் நாட்டின் உற்பத்திகள் மீதும் தாக்கம் ஏற்பட்டதன் மூலம் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) இந்த நிலைமை பாற்பண்ணையாளர்களின் வாழ்க்கை மீதும் அதேபோல் உள்நாட்டு பால் உற்பத்தி செயற்பாடு பலவீனமடைவதற்கும் ஓர் பிரபல காரணியாக அமையக்கூடும் என்பதனால் முன்னரைப் போன்று முறையாக செலுத்தல்களைச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-07
கேட்டவர்
கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-03-07
பதில் அளித்தார்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks