பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
523/ '19
கெளரவ மயந்த திசாநாயக்க,— ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் வறுமையை ஒழிக்கும் நோக்கத்துடன் தாபிக்கப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக உத்தேச நோக்கங்கள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும்;
(ii) சமுர்த்தி பயன்களுக்காக வருடாந்தம் செலவாகின்ற தொகை யாது என்பதையும்;
(iii) தற்போது சமுர்த்தி பயன்கள் கிடைக்காத போதும் மேற்படி பயன்களை எதிர்பார்த்து இருக்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கடந்த காலத்தில் சமுர்த்தி பயனாளிகள் பக்கச்சார்பற்ற விதத்தில் தெரிவு செய்யப்பட்டதாக திருப்தியடைகின்றாரா என்பதையும்;
(ii) இன்றேல், அதற்காகப் பின்பற்றப்படுகின்ற புதிய முறையியல் யாது என்பதையும்;
(iii) சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
(iv) ஆமெனில், எதிர்காலத்தில் அவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கை யாது என்பதையும்;
(v) சமுர்த்தி நிதியம் அண்மையில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட தேசிய கணக்காய்வுச் சட்டத்திற்கு அமைய கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுகின்றதா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-07
கேட்டவர்
கௌரவ மயந்த திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-03-07
பதில் அளித்தார்
கௌரவ தயா கமகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks