E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0524/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மயந்த திசாநாயக்க, பா.உ.

    1. 524/ '19

      கௌரவ மயந்த திசாநாயக்க,— பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அரசாங்கத்தினால் பொதுமக்களின் அவசியப்பாடுகளுக்காக அரசாங்க அலுவலகங்களில் உத்தியோகத்தர்களை சந்திப்பதற்காக வாரந்தோறும் திட்டவட்டமான அலுவலகத் தினமொன்று அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளதா;

      (ii) இந்த அலுவலக தினம் சம்பந்தமான சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டிருப்பின் அது யாது;

      (iii) அலுவலகத் தினமொன்று பிரகடனஞ் செய்யப்பட்டிருப்பின் அத்தினத்தில் பதவியணிக் கூட்டங்களையும் வேறு கூட்டங்களையும் நடாத்துவதால் பொதுமக்களுக்கு எதிர்நோக்க நேரிடுகின்ற சிரமங்கள் சம்பந்தமாக பரிகாரங்கள் நடைமுறையில் உள்ளனவா;

      (iv) திட்டவட்டமான அலுவலகத் தினங்களில் பிரதேச மற்றும் மாவட்ட உயர் உத்தியோகத்தர்கள் கொழும்பிலுள்ள தலைமையகங்களுக்கு அழைக்கப்படுகின்றனரா;

      (v) ஆமெனில் அத்தகைய தினங்களில் பொதுமக்களின் அவசியப்பாடுகளை ஈடேற்றுவதற்காக அமுலாக்கப்படுகின்ற திட்டங்கள் யாவை;

      (vi) பொதுமக்களுக்காக மிகவும் பயனுறுதிமிக்க அரச சேவையொன்றினை ஈடேற்றுவதற்கான புதிய திட்டங்கள் அமுலில் உள்ளனவா;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-08

கேட்டவர்

கௌரவ மயந்த திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-08

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks