E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0525/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மயந்த திசாநாயக்க, பா.உ.

    1. 525/'19

      கௌரவ மயந்த திசாநாயக்க,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையிலுள்ள நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டும் மொத்த வயல் காணிகளின் பரப்பளவு யாதென்பதையும்;

      (ii) அவற்றில் தற்போது நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வயல் காணிகளின் பரப்பளவு யாதென்பதையும்;

      (iii) இலங்கையிலுள்ள கைவிடப்பட்டுள்ள வயல் காணிகளின் பரப்பளவு யாதென்பதையும்;

      (iv) அக்காணிகளில் பயிர் செய்கைக்கான துரித திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றனவா என்பதையும்;

      (v) நெற் செய்கைக்குத் தேவையான விதை மற்றும் உரம் உரிய முறையில் தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (vi) நெல் கொள்வனவுக்காக தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) நெற் செய்கைக்காக இளம் சந்ததியினர் முன்வராமையினால் நிலவுகின்ற தொழிற்படை பற்றாக்குறை தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) நெற் செய்கைக்கு தேவைப்படும் இயந்திர சாதனங்கள் வசதியாக சலுகை விலைக்கு பெற்றுத்தர திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) இளம் சந்ததியினரை கமத்தொழிலில் ஈடுபடுத்த கவர்ச்சியான திட்டமொன்று செயற்படுத்தப்படுமெனில், அது யாதென்பதையும்;

      (iv) கமத்தொழிலாளரின் பிள்ளைகளுக்கு கமத்தொழில் துறையில் வேலை வாய்ப்புகள் பெற்றுத்தர விசேட திட்டமொன்று செயற்படுத்தப்படுகின்றதா என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-09

கேட்டவர்

கௌரவ மயந்த திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks