பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
554/ '19
கௌரவ சி. சிறீதரன்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரை கேட்பதற்கு,—
(அ) (i) கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் பல விவசாயப் பண்ணைகள் நடாத்தப்பட்டுவருகின்றன என்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) தனித்தனியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விவசாயப் பண்ணைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) இப் பண்ணைகளில் வேலை செய்வோரின் மொத்த எண்ணிக்கை யாதென்பதனையும்;
(iv) இப் பண்ணைகள் அமைந்துள்ள காணிகளின் அளவு ஏக்கரிலும், அவை எந்தெந்தப் பிரதேசங்களில் உள்ளன என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) சிவில் பாதுகாப்பு பிரிவினரால் நடாத்தப்பட்டு வருகின்ற பண்ணைகளில் வடக்கு மாகாண சபைக்குக் கையளிக்கவேண்டிய பண்ணைகள் இதுவரை கையளிக்கப்படாமைக்கான காரணம் என்னவென்பதனையும்;
(ii) அப் பண்ணைகள் எப்போது வடக்கு மாகாண சபைக்கு கையளிக்கப்படும் என்பதனையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-05-24
கேட்டவர்
கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-05-24
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks