E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0555/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

    1. 555/ '19

      கௌரவ சி. சிறீதரன்,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) கிளிநொச்சி மாவட்டத்தில்,

      (i) நிரந்தரமாக வதியும் குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்குரித்தான காணிகள் தொடர்பாகவும் அறிவாரா;

      (ii) காணி அறுதியுறுதினைக் கொண்டுள்ள குடும்பங்கள்/ஆட்களின் எண்ணிக்கை யாது;

      (iii) காணி அறுதியுறுதினைக் கொண்டுள்ள மேட்டுக் காணிகள் மற்றும் வயற் காணிகளின் எண்ணிக்கை யாது;

      (iv) காணி அனுமதிப் பத்திரத்தைக் கொண்டுள்ள குடும்பங்கள்/ ஆட்களின் எண்ணிக்கை யாது;

      (v) காணி அனுமதிப் பத்திரத்தைக் கொண்டுள்ள மேட்டுக் காணிகள் மற்றும் வயற் காணிகளின் எண்ணிக்கை யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வருடங்களுக்கு மேலாக வதியும் மக்களுக்கு இதுவரை காணி அறுதியுறுதி வழங்காமைக்கான காரணம் என்னவென்பதையும்;

      (ii) யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மக்கள் தமது காணிகளை வங்கி அல்லது ஏனைய நிதி நிறுவனமொன்றில் அடகு வைத்தல், கடன் பெறுதல் போன்ற செயற்பாடுகளின் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த முடியாத நிலையிலுள்ளனர் என்பதையும்;

      (iii) கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையில் காணி அறுதியுறுதி அல்லது காணி அனுமதிப் பத்திரமோ இல்லாது வசிக்கின்ற குடும்பங்கள்/ ஆட்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-10

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-20

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks