பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0560/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அ. அரவிந்த் குமார், பா.உ.

    1. 560/ '19

      கௌரவ அ. அரவிந்த் குமார்,— நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சிலும் தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபையிலும் பணியாற்றும் பதவியணி உத்தியோகத்தர்கள் 2010 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை கடமைத் தேவைகளின் பொருட்டும் உலக வங்கி உதவி உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் கீழுள்ள கருத்திட்டங்கள் தொடர்பாகவும் வெளிநாட்டுக்குச் சென்ற சந்தர்ப்பங்கள் எத்தனை என்பதையும்;

      (ii) அவ்வாறான ஒவ்வொரு உத்தியோகத்தர்களினதும் பெயர், பதவி, விஜயம் செய்த நாடு, விஜயத்தின் நோக்கம், விஜயத்தின் கால அளவு, விஜயத்திற்கான மொத்த செலவினம் (விமானப் பயணச்சீட்டுக் கட்டணம், வாழ்க்கைச் செலவுப் படி மற்றும் ஏனைய கொடுப்பனவுகள்) மற்றும் அதற்கான நிதியத்தினை வழங்கிய உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் தனித்தனியாக யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-08

கேட்டவர்

கௌரவ அ. அரவிந்த் குமார், பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-08

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks