E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0561/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அ. அரவிந்த் குமார், பா.உ.

    1. 561/ '19

      கௌரவ அ. அரவிந்த் குமார்,— நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்குரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெற்ற கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது பொருட்களுக்கான அனுப்பற் கட்டளை பிறப்பிப்பதற்காகவும் தரப் பரிசோதனை மேற்கொள்வதற்காகவும் உத்தியோகத்தர்கள் வெளிநாடு சென்ற சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட வெளிநாட்டு விஜயங்களுக்காக செலவிடப்பட்ட தொகையானது சபையின் அல்லது கருத்திட்டத்தின் செலவினத்தில் உள்ளடங்குகின்றதா என்பதையும்;

      (ii) அது தொடர்பான சகல விபரங்களும் முன்வைக்கப்படுமா என்பதையும்;

      (iii) அனுப்பற் கட்டளை பிறப்பிக்கப்பட்ட பொருட்களின் தரப் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக உத்தியோகத்தர்கள் இடைக்கிடை வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அவர்களது சேவைகளையும் உள்ளடக்கிப் புரியப்பட்ட போதிலும் அதன் மூலம் இடம்பெறுகின்ற பெரும் நட்டத்தினைக் குறைத்துக் கொள்வதற்காக உரிய பொருட்களின் மாதிரிகளைத் தருவித்தல் அல்லது அப்பொருட்களை இலங்கைத் துறைமுக அதிகார சபைக்குத் தருவித்து தரப் பரிசோதனை நடவடிககைகளை மேற்கொள்வதற்காக கவனம் செலுத்தப்படுமா என்பதையும்;

      (iv) இன்றேல், பொருட்களுக்கான தரப் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொருத்தமான வேறு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-11

கேட்டவர்

கௌரவ அ. அரவிந்த் குமார், பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-11

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks