பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0605/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

    1. 605/ '18

      கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில் துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை மின்சார சபை அல்லது அதன் முகவர் நிறுவனங்களினால் துண்டிக்கப்பட்ட மின் வழங்கலை மீண்டும் இணைப்பதற்கு ரூபா 1300/- தொகை அறவிடப்படுகின்றதா என்பதையும்;

      (ii) கடந்த ஒராண்டுக்கு முன்னர் இக்கட்டணம் ரூபா 500/- ஆக காணப்பட்டதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iii) இக்கட்டணத்தை அதிகரிப்பதற்கான காரணம் யாதென்பதையும்;

      (iv) அதிகரிக்கப்பட்ட கட்டணத்தைக் கணிப்பிட்ட அடிப்படை யாதென்பதையும்;

      (v) மின்சாரப் பட்டியலில் நிலுவை காணப்படும் போது அதனை தவணைக் கட்டணமாகச் செலுத்துவதற்கு இடமளிக்காமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (vi) 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 வரையில் மின்சார கட்டணம் செலுத்தாமையினால் மின் வழங்கல் துண்டிக்கப்பட்ட வீடுகள்/இடங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-09

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-09

பதில் அளித்தார்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks