பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0607/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

    1. 607/ '18

      கெளரவ ஆனந்த அளுத்கமகே,— மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையின் நாளாந்த மின் அலகு உற்பத்தி யாது என்பதையும்;

      (ii) நாளாந்த மின் அலகு கேள்வியானது பகல், இரவு அடிப்படையில் யாது என்பதையும்;

      (iii) நாளொன்றுக்கு தனியார் துறையின் மின் அலகுப் பங்களிப்பு;

      (iv) நாளொன்றுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற மின் அலகுகளின் எண்ணிக்கை;

      தனித்தனியே யாது என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) "சூர்ய பல சங்கிராமய" நிகழ்ச்சித்திட்டத்தின்,

      (i) அடிப்படை நோக்கம் யாது என்பதையும்;

      (ii) அதன் பயன்கள் யாவை என்பதையும்;

      (iii) உங்கள் அமைச்சின் செயற்பணி யாது என்பதையும்;

      (iv) சூரியசக்தி கருத்திட்டங்களை அமுல்படுத்துகின்ற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் யாவை என்பதையும்;

      (v) மேற்படி நிறுவனங்களைப் பதிவு செய்வதற்காக கவனத்தில் கொள்ளப்படுகின்ற நியமங்கள் யாவை என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இலங்கை ஒரு தீவாக இருப்பதனால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமொன்றாக கடல் அலைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், அமைச்சினால் அது தொடர்பில் குறிப்பிடத்தக்களவு ஊக்கம் செலுத்தப்படுவதில்லை என்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-11

கேட்டவர்

கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-07-11

பதில் அளித்தார்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks