E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0611/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

    1. 611/ '18

      கௌரவ ஆனந்த அலுத்கமகே,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) கண்டி மாவட்டத்தில், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமாக உள்ள காணிகளின் அளவும் பெயர்களும் வெவ்வேறாக யாவை என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) 2005 தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் பல்வேறு கருத்திட்டங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள சகல காணிகளினதும் பெயர்கள், அளவு மற்றும் காணி அமைந்துள்ள இடங்கள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (ii) இன்றளவில் இயங்குநிலையிலுள்ள கருத்திட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iii) 03 ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள, உத்தேச கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;

      (iv) இதுவரை கருத்திட்டங்களை செயற்படுத்த தவறியுள்ள காணிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் குத்தகை அடிப்படையில் கண்டி மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அநேகமான காணிகளில் கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படாத காரணத்தினால் பயன்மிக்க பணியொன்றுக்கு பயன்படுத்த கூடியதாக இருந்த அக் காணிகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதென்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

      (ii) இதுவரை கருத்திட்டங்கள் மேற்கொள்ளப்படாத காணிகளை மீள ஆணைக்குழுவிற்கு சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-08

கேட்டவர்

கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-08

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks