பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
614/ '18
கௌரவ ஆனந்த அளுத்கமகே,— மின்வலு, எரிசக்தி மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கண்டி மாவட்டத்தில், உலப்பனை, மொரகொல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் நீர்மின் நிலையத்தின் பிரதான அணைக்கட்டுக்கான அடிக்கல் நாட்டப்பட்ட திகதி யாது;
(ii) மேற்படி கருத்திட்டத்துக்காக செலவிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிதித்தொகை யாது;
(iii) மீள்குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாது;
(iv) வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாது;
(v) மீள்குடியமர்த்தும் பணிகள் பூர்த்தி செய்யப்படும் திகதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தற்போது நிர்மாணிக்கப்படும் நீர்மின் நிலையங்களில் மேற்குறிப்பிட்ட மின்நிலையக் கருத்திட்டமானது, மொரகஹகந்த நீர்ப்பாசன கருத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் நீர்மின் நிலையத்துக்கு மாத்திரம் இரண்டாவதாகக் கருதப்படுவதாகவும்;
(ii) சுமார் 30 மெகாவோட் கொள்ளளவினைக் கொண்டுள்ள இந்த மின் நிலையமானது ஒரு வருடத்தில் தேசிய மின்வலுத் தொகுதுக்கு சுமார் 100 மில்லியன் மின்அலகுகளை சேர்த்துக்கொண்டு, மின் பாவனையாளர்களுக்கு கணிசமான பணிகளை ஆற்றுமென்பதையும்;
அவர் அறிவாரா?
(இ) மேற்படி கருத்திட்டத்தின் பணிகளை துரிதப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-08-09
கேட்டவர்
கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-08-09
பதில் அளித்தார்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks