E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0620/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

    1. 620/ '18

      கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— நெடுஞ்சாலைகள், வீதிகள் அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) நாவலபிட்டிய நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் நாவலபிட்டிய நகரின் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் வீதிகள் அபிவிருத்தி அதிகாரசபையினால் 300 இலட்சம் ரூபாய் செலவில் நாவலபிட்டிய நகர மத்தியில் மேம்பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதென்பதை அறிவாரா?

      (ii) தற்போதைய நாவலபிட்டிய நகரசபை நிர்வாகத்தினர் வீதிகள் அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியின்றி மேற்படி அரச சொத்தினை தகர்த்து விற்பனை செய்வதற்கு உத்தேசித்துள்ளார்கள் என்பதை அறிவாரா?

      (iii) வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட இப் பாலத்தை தங்களின் அமைச்சின் அனுமதியின்றி தகர்த்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையினை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-11

கேட்டவர்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks