E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0623/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.

    1. 623/ '18

      கெளரவ செஹான் சேமசிங்க,— பிரதம அமைச்சரும் தேசியக் கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை பொலிஸிற்குச் சொந்தமான ஓட்டக் கூடிய நிலையிலுள்ள வாகனங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) மேற்படி வாகனங்களின் வகைகள் மற்றும் அவற்றுக்குரிய பொலிஸ் நிலையங்கள் தனித்தனியாக யாவை என்பதையும்;

      (iii) தற்போது ஓட்டக் கூடிய நிலையிலுள்ள வாகனங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கைப் பொலிஸிற்கென கொள்வனவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) மேற்படி வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்ட நிறுவனங்கள் யாவை என்பதையும்;

      (iii) அந்த நிறுவனங்களிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள் யாவை என்பதையும்;

      (iv) அதற்கென கடன் வசதி அளிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (v) அவ்வாறாயின், கடன் வசதி அளிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-04-03

கேட்டவர்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-04-03

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks