E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0635/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

    1. 635/ '18

      கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு தனியார் நிறுவனங்களுடன் இரகசியமாக உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கு அதிகாரம் அளிப்பதற்கு வாய்ப்புள்ளதா என்பதையும்;

      (ii) ஆராய்ச்சியொன்றினை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அதன் பெறுபேறுகளின் பெறுமதியினை தீர்மானிக்க முடியாதென்பதால் ரூ. 100/- போன்ற குறைந்த பட்ச தொகைக்கு அதன் பெறுபேறுகளை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க முடியுமா என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) மொரட்டுவை பல்கலைக்கழக பேரவையினால் கோட் ஜென் எனும் தனியார் நிறுவனத்துடன் செயற்கை அறிவு சார்ந்த ஆராய்ச்சியொன்றுக்காக 2017.02.06 ஆம் திகதியன்று உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) மேற்படி உடன்படிக்கையின் பிரகாரம், ஆராய்ச்சியின் பெறுபேறுகளை மேற்படி நிறுவனத்துக்கு ரூ 100/- தொகைக்கு அளிப்பதற்கு இரு தரப்பும் இணங்கியுள்ளதா என்பதையும்;

      (iii) இந்த உடன்படிக்கையினை கைச்சாத்திடுவதற்கு முன்னதாக அதன் உள்ளடக்கம் தொடர்பாக பல்கலைக்கழக கல்வி சார் குழுவுக்கு அறிவுறுத்தப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (iv) மேற்படி உடன்படிக்கை காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த விரிவுரை மண்டபமொன்று ஏற்புடைய நிறுவனத்தின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (v) ஆமெனில், அது எதற்காக என்பதையும்;

      (vi) விரிவுரை மண்டபமொன்றை வழங்குவது தொடர்பாக உடன்படிக்கையில் சேர்க்கப்பட்டது ஏன் என்பதையும்;

      (vii) இந்த உடன்படிக்கை மற்றும் இதனால் ஏற்படக்கூடிய தாக்கம் அரசாங்க பொறுப்புமுயற்சிகள் குழுவினால் விசாரிக்கப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-23

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks