E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0675/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன, பா.உ.

    1. 675/'19

      கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன,— சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) சுற்றுலாக் கைத்தெழில் தொடர்பாக வருடத்திற்கு 2.5 மில்லியன் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைக்கின்ற தேசிய இலக்கொன்று இருக்கின்றதென்பதையும்;

      (ii) இலங்கைக்கு வருகின்ற கூடுதலான சுற்றுலா பயணிகள் கடற்கரை வலயங்களை பார்வையிட வருகின்றனர் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) ஆமெனில், அது தொடர்பாக அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை யாதென்பதையும்;

      (ii) இனங்காணப்பட்டுள்ள கடற்கரை சார்ந்த சுற்றுலா வலயங்கள் யாவையென்பதையும்;

      (iii) மேற்படி சுற்றுலா கரையோர வலயங்களை துரிதமாக தாபிப்பது எவ்வாறென்பதையும்;

      (iv) இது தெடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) இவ்வாறு ஒரு சுற்றுலா வலயத்தை மேம்படுத்த செலவாகும் பணத்தொகை யாதென்பதையும்;

      (ii) ஏதேனும் கடற்கரை வலயமொன்று சுற்றுலா கடற்கரை வலயமொன்றாக விதந்துரைக்கப்படும் சான்றிதழை பெற எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-04-02

கேட்டவர்

கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன, பா.உ.

அமைச்சு

சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-04-02

பதில் அளித்தார்

கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks