பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
680/ '18
கௌரவ கனக ஹேரத்,— ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் வாழும் மூத்த பிரசைகளுக்கு (60 வயதைக் கடந்தவர்கள்) அரசாங்கத்தினால் வழங்கப்படும் நலனோம்புகை வசதிகள் யாவை;
(ii) 2001 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் மூத்த பிரசைகளின் சனத்தொகை வீதம் ஒவ்வொரு வருடத்திற்கு ஏற்றவாறு எவ்வளவு;
(iii) எதிர்வுகூறல்களுக்கேற்ப 2021 ஆம் ஆண்டில் இவ்வீதம் எவ்வளவாக காணப்படும்;
(iv) இலங்கையில் மூத்த பிரசைகளின் வீதம் வருடாந்தம் துரிதமாக அதிகரிக்கின்றதென்பதை அவர் அறிவாரா;
(v) ஆமெனில், அதிகரிக்கும் இந்த மூத்த பிரசைகளின் பாதுகாப்பிற்கும் நலனோம்புகைக்கும் ஏதேனும் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மூத்த பிரசைகளுக்கு வழங்கப்படும் சிரேஷ்ட பிரசைகள் அடையாள அட்டையின் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் சலுகைகள் நிறைவேற்றப்படுகின்றதா என்பதையும்;
(ii) மூத்த பிரசைகளின் நிலையான வைப்பிலிருந்து அறவிடப்படும் வரியிலிருந்து இவர்களுக்கு விலக்களிப்பதற்கு உங்கள் அமைச்சு தலையிடுமா;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) இலங்கையில் உள்ள வயோதிபர் இல்லங்களின் எண்ணிக்கை யாது;
(ii) இந்த வயோதிபர் இல்லங்களின் தரத்தை நிர்ணயிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் யாவையென்பதையும்;
அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-29
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
அமைச்சு
ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-03-29
பதில் அளித்தார்
கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks