பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
687/'18
கௌரவ பிமல் ரத்நாயக்க,— மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பிராந்திய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் பதவிகளுக்காக (MA 03-iii தரம்) தகுதி வாய்ந்தவர்களைத் தெரிவு செய்வதற்காக நேர்முகப் பரீட்சையொன்று நடத்தப்பட்டது என்பதையும்;
(ii) அந்த பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு அவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும் அப்பதவிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
(iii) அதற்குரிய நியமனக் கடிதம் உரிய காலத்தில் அனுப்பி வைக்கப்படுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவியின் ஒப்பத்துடன் NCPA/AU/418(i)(06) ஆம் இலக்க மற்றும் 2017.12.14 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் நுகேகொட, உடஹமுல்ல, கும்புக்கன்கஹ பொக்குன வீதி, 3 ஆம் மாவத்தை, 58/5 இலக்கமுடைய வீட்டில் வதியும் திருமதி. எச். எல். ஏ. லுணுவில அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஆட்களுக்குப் பதிலாக அரசியல் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு வேறு குழுவினரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதையும்;
(ii) திருமதி லுணுவில உள்ளிட்ட நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுமா என்பதையும்;
(iii) ஆமெனில், குறிப்பிட்ட நியமனங்கள் வழங்கப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-07-11
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-07-11
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks