E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0769/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.

    1. 769/ '19

      கௌரவ விதுர விக்கிரமநாயக்க,— கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வரையறுக்கப்பட்ட கிழக்கு ஹேவாகம் கோரலே பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிராமிய வங்கி கிளைகளில் வைப்பிலிடப்பட்டிருந்த ரூ. 54 கோடி பணம் தொடர்பாக நடந்துள்ள மோசடி காரணமாக கூட்டுறவு சங்கத்திற்கு அப்பிரதேச மக்களின் அன்றாட வாழ்க்கை மீது தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற சேவைகள் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென்பதையும்;

      (ii) சேமிப்புப் பணத்தை பெற முடியாமையினால் சேமிப்பாளர்களும் கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவர்களும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர் என்பதையும்;

      (iii) மேற்படி நிலைமை காரணமாக பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊழியர்கள் தொழில்களைக் கூட இழந்துவிட வாய்ப்புள்ளதென்பதையும்;

      (iv) மேற்படி ஊழல் காரணமாக நாளுக்கு நாள் உரிய சேவைகள் துண்டிக்கப்படுவதால் கூட்டுறவு அமைப்பு வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதென்பதையும்;

      அவர் அறிவார?

      (ஆ) மேற்படி நெருக்கடியை துரிதமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-20

கேட்டவர்

கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.

அமைச்சு

கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-06-20

பதில் அளித்தார்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks