E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0776/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

    1. 776/ '19

      கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரை சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஔடதங்களுக்காக செலவாகிய இறக்குமதிக் கிரயம் ஒவ்வொரு வருடத்தின் படி எவ்வளவு;

      (ii) 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஔடதங்களுக்காக செலவாகிய கிரயம் ஒவ்வொரு வருடத்தின் படி எவ்வளவு;

      (iii) உள்நாட்டு வழங்கலாளர்களிடமிருந்து ஔடதங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்கையில் கடைப்பிடிக்கப்படுகின்ற கேள்வி நடைமுறை, முறைசார்ந்ததென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;

      (iv) ஆமெனில் 2018 ஆம் ஆண்டில் உள்நாட்டு ரீதியாக வழங்கல்களை மேற்கொண்ட கம்பெனிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) இறக்குமதி செய்யப்படுகின்ற ஔடதங்கள் பாவனைக்கு பொருத்தமற்ற அல்லது உரிய தரமற்றவையா என்பது பரிசோதிக்கப்படுகின்றதா;

      (ii) ஆமெனில் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அவ்விதமாக இனங்காணப்பட்ட ஔடதங்கள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதிக் கிரயம் எவ்வளவு;

      (iii) உரிய தரமற்ற ஔடதங்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு நோயாளிகளின் பாவனைக்கு கிடைக்கின்றமை பாரதூரமான சுகாதார சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறாரா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-09

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-09

பதில் அளித்தார்

கௌரவ ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks