E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0777/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

    1. 777/ '19

      கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) "என்றபிரைஸ் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் செயற்படுத்துகையில் கம்பஹா மாவட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட வட்டி சலுகை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி வேலைத்திட்டத்தை செயற்படுத்துகையில் விசேட கவனம் செலுத்தப்ட்ட துறைகள் யாவையென்பதையும்;

      (iii) "என்றபிரைஸ் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் செயற்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் வங்கிகள் யாவையென்பதையும்;

      (iv) மேற்படி திட்டத்தில் கலந்துக்கொள்வதற்கு கடனுக்காக விண்ணப்பித்துள்ள கம்பஹா மாவட்டத்தின் விண்ணப்பதாரர்கள் ஆண் பெண் இரு பாலாருக்கும் ஏற்ப தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

      (v) 2018 ஆண்டுக்குள் மேற் குறிப்பிட்டுள்ள நபர்களுக்காக விடுவிக்கப்பட்டுள்ள கடன் தொகை எவ்வளவென்பதையும்;

      (vi) மேற்படி தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-22

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-22

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks