E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0778/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

    1. 778/ '19

      கெளரவ இந்திக்க அநுருத்த ஹேரத்,— நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கம்பஹா மாவட்டத்தில், 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மக்களுக்கு பயன்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக கடந்த அரசாங்கம் ஆரம்பித்த கரஸ்நாகல குடிநீர் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் நின்றுபோயுள்ளது என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

      (ii) மேற்படி கருத்திட்டத்தின் தற்போதைய நிலைமை யாது என்பதையும்;

      (iii) கருத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iv) கருத்திட்டத்தைப் பூர்த்தி செய்து மக்களுக்குப் பயன்களைப் பெற்றுக் கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள திகதி கடந்து நீண்டகாலமாகின்றது என்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

      (v) ஆமெனில், இக்கருத்திட்டத்தைப் பூர்த்தி செய்து அதன் பயன்களை மக்களிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ள திகதி யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-23

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks