E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0813/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

    1. 813/ '19

      கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு.—

      (அ) (i) வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளை நேர்முகப் பரீட்சை மூலம் அரசாங்க நிறுவனங்களில் பயிலுநர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பதற்காக, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரினால் வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரத்துக்கேற்ப, விண்ணப்பப்படிவங்களை அனுப்பிவைத்துள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை யாது;

      (ii) மேற்படி நேர்முகப்பரீட்சைக்காக தோற்றிய பட்டதாரிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;

      (iii) நேர்முகப் பரீட்சையின் பின்னர், பயிற்சிக்காக ஆட்சேர்க்கப்பட்டுள்ள பட்டதாரிகளின் எண்ணிக்கை யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) குறிப்பிட்ட பயிற்சிக்காக பட்டதாரிகளை ஆட்சேர்க்கையில் உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரிகளாக அவர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளார்களா;

      (ii) ஆமெனில், ஆட்சேர்க்கப்பட்டுள்ள வெளிவாரி பட்டதாரிகளின் எண்ணிக்கை மற்றும் உள்வாரி பட்டதாரிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;

      (iii) வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்குகையில் சிக்கலான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-25

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks