E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0826/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ச. வியாழேந்திரன், பா.உ.

    1. 826/'19

      கௌரவ ச. வியாழேந்திரன்,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின் புன்னைக்குடா பிரதேசத்தில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணியை சட்டவிரோதமாக கைப்பற்றியமைக்கு எதிராக ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை யாதென்பதையும்;

      (ii) காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) சட்டத்தின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் வருகின்ற மேற்படி காணி தொடர்பாக ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) மாவட்டச் செயலாளரினால் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதப்பட்ட ADMGC(MN)3/7 எனும் இலக்க, 2016.05.16 திகதிய கடிதம் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் ஆணைக்குழுவிற்குச் சொந்தமான அக் காணிகள் தொடர்பில் மேற்கொண்ட சட்டவிரோதமான அத்துமீறல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை யாதென்பதை அவர் அறிவிப்பாரா?

      (இ) (i) ஆணைக்குழுவின் தலைவரினால் MADA/75, 76, 77 இலக்க, 2016.09.26 திகதி நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை நடவடிக்கை யாதென்பதையும்;

      (ii) பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய நியமிக்கப்பட்ட CH/LRC/01 ஆம் இலக்க, 2017.08.10 ஆம் திகதிய விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) மேற்படி (இ) இல் குறிப்பிட்ட அறிக்கையை இச் சபையில் சமர்ப்பிக்க அவர் நடவடிக்கை எடுப்பாரா?

      (உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-04-05

கேட்டவர்

கௌரவ ச. வியாழேந்திரன், பா.உ.

அமைச்சு

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-04-05

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks