பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
834/ '19
கௌரவ காதர் மஸ்தான்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரை கேட்பதற்கு,—
(அ) (i) யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் 2009 முதல் 2012 வரையான காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தின் மெனிக் பாம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள் என்பதனை அவர் அறிவாரா;
(ii) மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் அங்கு தங்கியிருந்த குடும்பங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதத்திற்கமைய வெவ்வேறாக எத்தனை என்பதனையும்;
(iii) மேற்குறிப்பிட்ட குடும்பங்களின் ஆட்களின் மொத்த எண்ணிக்கை என்னவென்பதனையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) நாளாந்த அடிப்படையில் அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கவென அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதனையும்;
(ii) நபர் ஒருவருக்கு காலை வேளை, மதிய வேளை மற்றும் இரவு வேளை உணவுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதனையும்;
(iii) வழங்கப்பட்ட உணவு நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் காணப்பட்டதாவென்பதனையும்;
(iv) சர்வதேச, உள்நாட்டு அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களினால் அவர்களுக்கு உணவு வழங்குவதில் செய்யப்பட்ட பங்களிப்புகள் உள்ளடங்கலான முழு விபரங்களையும்;
(v) வழங்கப்பட்டிருந்த உணவின் தரம் தொடர்பிலான முறைப்பாடுகள் எவையேனும் பெறப்பட்டிருந்தனவாவென்பதனையும்;
(vi) ஆமெனின், அம்முறைப்பாடுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்பதனையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-09-19
கேட்டவர்
கௌரவ காதர் மஸ்தான், பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks