பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
854/ '19
கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஜனவரி தொடக்கம் ரூ.10,000/- விஷேட கொடுப்பனவு அரச ஊழியர் சம்பளத்தில் சேர்க்கப்பட்டு அடிப்படை சம்பளம் ரூ.10,000/- ஆல் அதிகரிக்கப்பட்டமையினாலும்;
(ii) 2016 ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் சம்பளத்தில் மேற்படி தொகை சேர்க்கப்படாமையினாலும்;
ஓய்வுபெற்ற அரச ஊழியர் சம்பள முரண்பாடு தோன்றியிருப்பதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(ஆ) (i) வரவு செலவு திட்டத்தால் மீண்டும் அரச ஊழியர் சம்பளம் உயர்த்தப்பட்டமையால் மேற்படி சம்பள முரண்பாடு மென்மேலும் அதிகரித்துள்ளமையால் இம்முரண்பாடு தீர்க்கப்பட வேண்டும் என்பதையும்;
(ii) சம்பள முரண்பாட்டை தீர்த்துக்கொள்வதற்காக ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்கப்பட வேண்டும் என்பதையும்;
(iii) அரச ஊழியர் சம்பள அதிகரிப்புக்களின் போது நியாயமான சதவீதத்தை ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் சம்பளத்திலும் சேர்ப்பதற்கு நிரந்தர முறையியலொன்றை பேணுவதற்கான முக்கித்துவத்தையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(இ) (i) மேற்படி சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு தேவையான செயன்முறைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனின், அத்திகதி யாதென்பதையும்;
(iii) சம்பள முரண்பாட்டு தீர்க்கப்படும் சதவீதம் என்னவென்பதையும்;
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-07-23
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-07-23
பதில் அளித்தார்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks